தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகாளய பட்சம் முன்னோர் வழிபாடு இன்று துவக்கம்

மகாளய பட்சம் முன்னோர் வழிபாடு இன்று துவக்கம்

மகாளய பட்சம் முன்னோர் வழிபாடு இன்று துவக்கம்


ADDED : செப் 26, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புரட்டாசி மாதத்தையொட்டி மகாளய பட்சம் முன்னோர்கள் வழிபாடு இன்று துவங்கி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது..

நமக்காக வாழ்நாள் முழுதும் எந்தவித எதிர்பார்ப்பும் பார்க்காமல் குடும்ப நலன் கருதி வாழ்ந்து மறைந்த நமது தாய், தந்தை மற்றும் உறவினர்களுக்காக புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய பட்சம் 15 நாட்களும் பிண்டதானம், தில தர்ப்பணம், அன்னதானம், பசுமாடு பராமரிப்பு மூலம் நமது முன்னோர்களுக்கு நன்றி செலுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.

அதில் தனது தந்தை, தாய் திதியன்று கடற்கரை நதிநீர் நிலைகள் மற்றும் பசுக்கள் நிறைந்த இடத்தில் பிண்டதானம் கொடுத்து தில தர்ப்பணம் மூலம் திருப்தி அடைய செய்ய வேண்டும். விபத்து துர் மரணம் அடைந்தவர்களுக்கு வரும் 9ம் தேதியும், 10ம் தேதி மகாளய அமாவாசை அன்று கணவனுக்காக மனைவியே  மகாளயம் செய்யலாம்.

குறிப்பாக இன்று 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை வீட்டில் சுப நிகழ்ச்சியோ, வீடு இடித்தல் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் சண்டையிடுதல், முகச்சவரம் செய்தல், அசைவம், மதுபானம் அருந்துதல், குலதெய்வ வழிபாடுகள், வெளியூர், வெளிநாடு பிரயாணங்களை தவிர்ப்பது மிக நல்லது.

ஏனென்றால் நமது முன்னோர்கள் சூரிய ஒளிக்கதிர்கள் மூலம் தேவர்களிடம் உத்தரவு பெற்று நமது இல்லத்தில் 15 நாட்கள் தங்கி நம்மை ஆசீர்வதித்து மகிழ்வார்கள் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும் விவரங்களுக்கு 9842327791, 9842329770 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us