/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
/
இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
ADDED : பிப் 17, 2026 04:12 AM

வானுார்: இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில், இரும்பை சந்திப்பில் மகா காளேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நேற்று முன்தினம் மகா சிவராத்திரி விழா நடந்தது. அதனையொட்டி மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் நடந்தது.
நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 3:00 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தது.
விழாவையொட்டி, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நள்ளிரவு முழுதும் பக்தர்கள் கோ வில் வளாகத்தில் சிவபுராணங்கள் பாடினர். விழாவையொட்டி, பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
விழவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்.
ராவுத்தன்குப்பம் வசந்தா கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் கவுன்சிலர் பிரகாஷ், அ.தி.மு.க., மாவட்ட பாசறை துணைச் செயலாளர் வினோத்குமார், வானுார் கிழக்கு ஒன்றிய பா.ம.க., செயலாளர் ரகு (எ) ராகவேந்திரன், திருச்சிற்றம்பலம் வி.வி., கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் வினோத்குமார், திண்டிவனம் தொழிலதிபர் கே.ஆர்.எஸ்., பில்டர்ஸ் உரிமையாளர் சுப்பராயலு உட்பட பலர் பங்கேற்றனர். நேற்று காலை 6;00 மணிக்கு சுவாமி வீதியுலா ந டந்தது.

