/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மார்ச் 6ல் சனிப்பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு யாகம்
/
மார்ச் 6ல் சனிப்பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு யாகம்
மார்ச் 6ல் சனிப்பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு யாகம்
மார்ச் 6ல் சனிப்பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு யாகம்
ADDED : பிப் 17, 2026 04:16 AM

புதுச்சேரி: சனிப்பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் 6ம் தேதி சிறப்பு யாகம் மற்றும் மகர கும்ப தீபம் ஏற்றப்படுகிறது.
கிரகங்கள் ஒன்பது. அவற்றில் முக்கியமான ஒன்றானவர் சனீஸ்வரர். நீதிமானான இவர், இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை வேறு ராசிக்கு இடம் பெயர்ந்து நீதி பரிபாலனை செய்து வருகிறார். தற்போது கும்ப ராசியில் இருந்து, வரும் மார்ச் 6ம் தேதி காலை 8:26 மணிக்கு மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இச்சனிப் பெயர்ச்சிதோஷத்தில் இருந்து உலக மக்களை காத்திட வேண்டி, புதுச்சேரிஅடுத்த மொரட்டாண்டியில் உள்ளசனீஸ்வரர் கோவிலில் மகர கும்ப தீப தரிசனம் நடக்கிறது.
இப்பூஜையில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். பங்கேற்க விரும்புவோர்கோவிலில்ரூ.3,000 செலுத்தி தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், விபரம் வேண்டுவோர் 93454 51655 என்ற மொபைல்எண்ணில்தொடர்பு கொள்ளலாம்

