தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 3 பேருக்கு வலை 

 டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 3 பேருக்கு வலை 

 டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 3 பேருக்கு வலை 


ADDED : பிப் 17, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து 3பேரை தேடி வருகின்றனர்.

நை னார் மண்டபத்தை சேர்ந்தவர் ரமேஷ், 39; டிரைவர். நேற்று அதிகாலை 3:30 மணிக்கு முகத்தில் துணி அணிந்து கொண்டு பைக்கில் வந்த 3 பேர் விட்டின் கேட் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.

தொடர்ந்து, கற்கலை கொண்டு தாக்கினர். இதனால் சத்தம் கேட்டு ரமேஷின் அம்மா கதவை திறந்தார்.

அப்போது வீட்டின் கேட் தீபற்றி எரிந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட அவர் அச்சத்தில் கூச்சலிட்டார். உடன் 3 பேரும், அவரை பார்த்து, உங்கள் குடும்பத்தையே இதேபோல், பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுவோம் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மிரட்டல் விடுத்தது யார் என அருகில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பார்த்ததில் அவர்கள் அதே பகுதியான கவிக்குயில் வீதியை சேர்ந்த ராம் மகன் திலீப், அவரது உறவினர் சூர்யா மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் என தெரிந்தது.

இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us