/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா
/
மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா
ADDED : பிப் 16, 2026 07:05 AM

புதுச்சேரி: புதுச்சேரி திருவாதிரை நாட்டியாலயா சார்பில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் நடந்தது.
வேலுநாச்சியார் இயக்கத்தின் கலை-பண்பாட்டு அணி தலைவர் குரு திரிபுரசுந்தரி வரவேற்றார். சிறப்பு விருந்தனர்களாக வேலுநாச்சியார் இயக்கத்தின் நிறுவனர் கலைவரதன், கலை பண்பாட்டுத் துறையின் முன்னாள் இயக்குனர் கலியபெருமாள், லட்சுமி குழுமம் நிர்வாக இயக்குனர் குகன் ஆகியோர்கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில் நாட்டியாலயா மாணவிகள் சிவபெருமானுக்கு நாட்டியாஞ்சலி செலுத்தினர். லலிதா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கத்தின் செயலாளர் கலைவாணி கணேசன், இணை தலைவர் காஞ்சனா, இணை செயலாளர் வெற்றிவேலன், வேல்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏராளமான பொதுமக்கள் நாட்டியாஞ்சலியைக் கண்டு களித்தனர். விழாவில் நாட்டியாஞ்சலி மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

