/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சார்யா கல்லுாரியில் 'மஹா உத்சவ்' நிகழ்ச்சி
/
ஆச்சார்யா கல்லுாரியில் 'மஹா உத்சவ்' நிகழ்ச்சி
ADDED : மார் 30, 2025 03:33 AM

புதுச்சேரி ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 'மஹா உத்சவ்' நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரியில், 2024-25ம் ஆண்டிற்கான 'மஹா உத்சவ்' (கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள்) தொடங்கியது. நிகழ்ச்சியை, மேலாண் இயக்குனர் அரவிந்தன், நேரலையின் மூலம் துவக்கி வைத்து வாழ்த்தினார். கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், வணிக மேலாண்மைத் துறைத் தலைவர் நேத்ர பிரகாஷ் வரவேற்றார்.
கல்லுாரியின் முதல்வர் விமல் ஆனந்த் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், புதுச்சேரி, தமிழகத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் போட்டியாளர்களாகவும், ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர். இதில், சிறப்பு விருந்தினர்களாக தனியார் தொலைகாட்சி தொகுப்பாளர்கள் அசார், சரவணகுமார் ஆகியோர் மாணவர்களை மகிழ்வித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், அதிகப்படியான போட்டிகளில் பங்கேற்று கோப்பையை புதுச்சேரி ஆதித்யா கலை கல்லுாரி மாணவர்கள் பெற்றனர். ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் நன்றி தெரிவித்தார்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முருகதாஸ், ரமேஷ்குமார் உட்பட பேராசிரியர்கள் செய்திருந்தனர்.