/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகாகவி பாரதி பற்றாளர் மாநாடு சாதனைகளுக்கு விருது வழங்கல்
/
மகாகவி பாரதி பற்றாளர் மாநாடு சாதனைகளுக்கு விருது வழங்கல்
மகாகவி பாரதி பற்றாளர் மாநாடு சாதனைகளுக்கு விருது வழங்கல்
மகாகவி பாரதி பற்றாளர் மாநாடு சாதனைகளுக்கு விருது வழங்கல்
ADDED : ஜன 20, 2025 06:27 AM

புதுச்சேரி: புதுச்சேரி திருவள்ளுவர் உலக சாதனையாளர்கள் அமைப்பு, மகாகவி பாரதியார் ஞாலத்தமிழ் கலைக்கழகம், யோகி பதிப்பகம் சார்பில் பாரதி பற்றாளர் மாநாடு நடந்தது.
பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் நடந்த மாநாட்டிற்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். திருவள்ளுவர் உலக சாதனையாளர்கள் அமைப்பு பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.அமைப்பு தலைவர்கள் அசோகன், சம்பத்குமார், சோமசுந்தரம், ஆலோசகர் ஞானசேகரன் முன்னிலை வகித்தனர்.
கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் கலந்து கொண்டு, 'மகாகவி பாரதி புதிய ஆத்திச்சூடியும் - புதுக்கவிதையும்', 'கவிஞர் தமிழ்ஒளி 100' ஆகிய நுால்களை வெளியிட்டு, சாதனையாளர்களுக்கு பாரதியார் சிறப்பு விருதுகள் வழங்கினார்.
தமிழ்ச் சங்க செயலாளர் சீனு மோகன்தாசு, முன்னாள் செயலாளர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, கண்மணி கிரியேசன்ஸ் தலைவர் ராஜா, படைப்பாளர் இயக்க நிறுவனர் ஆறு செல்வன், காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய பேராசிரியர் கிருஷ்ணா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
திருவள்ளுவர் உலக சாதனையாளர்கள் அமைப்பு தலைவர் சரவணன் தலைமையில் 'வான்புகழ் வள்ளுவம்' தலைப்பில் உரையரங்கம் நடந்தது. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வாசுதேவன் ' அறம் போற்றும்', அரவிந்தன் ' பொருள் காக்கும்', வசந்த் 'காமம் காட்டும்' தலைப்பில் உரையாற்றினர். துணை செயலாளர் திவ்யா தொகுத்து வழங்கினார். இணைச் செயலாளர் லங்கேஷ்வரன் நன்றி கூறினார்.