/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு அதிகாரியை மிரட்டி பணம் பறித்த முக்கிய குற்றவாளி கைது
/
அரசு அதிகாரியை மிரட்டி பணம் பறித்த முக்கிய குற்றவாளி கைது
அரசு அதிகாரியை மிரட்டி பணம் பறித்த முக்கிய குற்றவாளி கைது
அரசு அதிகாரியை மிரட்டி பணம் பறித்த முக்கிய குற்றவாளி கைது
ADDED : ஏப் 29, 2025 04:24 AM
புதுச்சேரி: அரசு அதிகாரியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
புதுச்சேரி அரசு அதிகாரி ஒருவர் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து ஒரு இளம் பெண்ணை, ரெட்டியார்பாளையம் அழைத்து வந்து அங்கு ஒரு தங்கும் விடுதியில் தனிமையில் இருந்த சம்பவத்தை ஒரு கும்பல் வீடியோ எடுத்து மிரட்டி ரூ.10 லட்சம் பணம் பறித்துள்ளனர்.
மேலும் பணம் கேட்டு மிரட்டியதை தொடர்ந்து அவர் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து வாணரப்பேட்டையை சேர்ந்த ரவுடி தீனா (எ) தீனதயாளன், 29, 3 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 4.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய பட்டதாரி வாலிபர் கிஷோர் 25, என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி ரங்கராஜனை தேடி வருகின்றனர்.