/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் டிரேடிங் என மோசடி; வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
/
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் டிரேடிங் என மோசடி; வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் டிரேடிங் என மோசடி; வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் டிரேடிங் என மோசடி; வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
ADDED : செப் 19, 2024 01:10 AM

புதுச்சேரி: ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் டிரேடிங் செய்யலாம் என கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், டீம் லீடராக செயல்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூர், நாமக்கல், நெய்வேலியில் போலி கால் சென்டர்கள் நடத்தி, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் டிரேடிங் செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றிய கும்பலை, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக, பிரவீன், ஜெகதீஷ், முகமது அன்சர், தவுபில் அகமது, ராமச்சந்திரன், பிரேம் ஆனந்த், விமல்ராஜ் உள்ளிட்ட 7 பேர் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, நெய்வேலியில் போலியாக இயங்கி வந்த என்.டி.எஸ்., குரூப் ஆப் கம்பெனி கால் சென்டர் அலுவலகத்தில் ரூ. 3 கோடி மதிப்புள்ள கார், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பிரவீன், தவுபில் அகமது, ராமச்சந்திரன் ஆகிய மூவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். நாமக்கல், பெங்களூரில் உள்ள அலுவலகங்களில் சைபர் கிரைம் போலீசார் ஆய்வு நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான, திருவெண்ணைநல்லுார், மாரங்கியூர், தெற்கு வீதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மகாதேவன், 30; என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இவர், நெய்வேலி என்.டி.எஸ்., குரூப் ஆப் கம்பெனியில் டீம் லீடராக செயல்பட்டுள்ளார். தனக்கு கீழ் செயல்பட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு, மாதம் ரூ. 30 முதல் ரூ. 50 லட்சம் வரை 'டார்கெட்' கொடுத்து வேலை வாங்கியுள்ளார்.

