தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணி: ரயில்  சேவைகளில் மாற்றம்

திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணி: ரயில்  சேவைகளில் மாற்றம்

திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணி: ரயில்  சேவைகளில் மாற்றம்


UPDATED : செப் 21, 2026 08:36 PM

ADDED : செப் 21, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 08:36 PM ADDED : செப் 21, 2026 08:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருச்சி கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக, ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து திருச்சி கோட்ட முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

திருச்சி, காரைக்கால் டெமு ரயில் நாளை (23ம் தேதி) முதல் 30ம் தேதி வரை காலை 8.40 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் ரயில் திருவாரூர் வரை மட்டுமே இயங்கும்.

தாம்பரம்-விழுப்புரம் மேமு பயணிகள் ரயில், வரும் 26, 28, 30 தேதிகளில் காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு, முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்.

காரைக்கால்-திருச்சி டெமு ரயில் நாளை (23ம் தேதி) முதல், 30ம் தேதி வரை பிற்பகல் 2.55 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படுவதற்கு பதில், திருவாரூர் சந்திப்பில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும். விழுப்புரம்-சென்னை மேமு பயணிகள் ரயில் வரும் 26,28,30ம் தேதிகளில், விழுப்புரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக, முண்டியம்பாக்கத்தில் இருந்து 1.37 மணிக்கு புறப்படும்.

விழுப்புரம் -மயிலாடுதுறை மேமு பயணிகள் ரயில் வரும் 26,28,30 தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக, சேர்ந்தனுாரில் பிற்பகல் 2.48 மணிக்கு புறப்படும். காரைக்காலில்-தஞ்சாவூர் பயணிகள் ரயில், நாளை (23ம் தேதி) முதல் 30ம் தேதி வரை காரைக்காலில் இருந்து புறப்பட்டு, 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

புதுச்சேரி-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 30ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு வழியில் 20 நிமிடங்கள் தாமதப்படுத்தி இயக்கப்படும். புதுச்சேரி-காகிநாடா போர்ட் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 26, 28 தேதிகளில் பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 45 நிமிடங்கள் தாமதமாக 2.15 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us