தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மோசமான வானிலை காரணமாக புதுச்சேரி விமான சேவை பாதிப்பு 

மோசமான வானிலை காரணமாக புதுச்சேரி விமான சேவை பாதிப்பு 

மோசமான வானிலை காரணமாக புதுச்சேரி விமான சேவை பாதிப்பு 


ADDED : செப் 21, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மோசமான வானிலை காரணமாக பெங்களூரு–புதுச்சேரி விமானம் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது், புதுச்சேரி–ஹைதராபாத் விமானம் ரத்து செய்யப்பட்டது.

புதுச்சேரியில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக புதுச்சேரி விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.

அதன்படி, பெங்களூருவில் இருந்து புதுச்சேரி வந்த விமானம், வானிலை சாதகமாக இல்லாததால், புதுச்சேரியில் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 66 பயணிகள் பயணித்தனர்.  

இதேபோல், புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் செல்ல தயார் நிலையில் இருந்த விமானம், மோசமான வானிலை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது. அதில், 64 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். மோசமான வானிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற விமான சேவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us