ADDED : ஆக 30, 2026 07:21 PM

புதுச்சேரி: புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன்– ரமா வைத்தியநாதன் இல்ல திருமண விழா நடந்தது.
விழாவில், தமிழ்நாடு காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர், மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று, மணமக்கள் சின்மயன் – ஸ்நேகா பிரியதர்ஷினி ஆகியோரை பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் குலாம் அஹ்மத் மீர், பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி., தமிழ்நாடு காங்., மாநில முன்னாள் தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் எம்.பி., தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சம்பத், தமிழக காங்., ஓ.பி.சி., தலைவர் நவீன் கோபி, புதுச்சேரி மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தொழிலதிபர்கள் மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
விழாவிற்கு வந்தவர்களை முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன் – ரமா வைத்தியநாதன் வரவேற்றனர்.
