பிரதமருக்கு உறுதுணையாக இருக்க மக்களுக்கு மாஜி சபாநாயகர் அழைப்பு
பிரதமருக்கு உறுதுணையாக இருக்க மக்களுக்கு மாஜி சபாநாயகர் அழைப்பு
UPDATED : அக் 13, 2026 07:47 PM
ADDED : அக் 13, 2026 07:44 PM
செல்வம் படம் வைக்கவும்
புதுச்சேரி: ‘எஸ்.ஐ.ஆர்.,க்கு எதிராக செயல்படுபவர்களை வேறுபடுத்தும் விதமாக, மக்கள் எழுச்சியோடு பிரதமருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என முன்னாள் சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், கூறியதாவது;
இந்திய தேர்தல் ஆணையமானது எஸ்.ஐ.ஆர்., எனும் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியலை கொண்டு வந்து, இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் பெயர்களை நீக்கியதான் மூலம் இந்தியா சரியான வாக்காளர்களை கொண்டு தேர்தலை சந்தித்து கொண்டிருக்கிறது.
இதில் ஏதோ தவறு நடந்து விட்டது போல, காங்., கட்சியை சேர்ந்த ராகுல், பல்வேறு வெளிநாடு அமைப்புகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு இயக்கம் நடத்துபவர்களும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும், நாடு முழுதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி, வளர்ச்சி அடைந்த பாதையை நோக்கி நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிக்கு தடை ஏற்படுத்துகின்றனர்.
சிறந்த முறையில் பிரதமர் மோடி 2047-ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி தன்னுடைய பங்களிப்பை செலுத்திக் கொண்டிருக்கிறார். இந்த எஸ்.ஐ.ஆர்., எனும் தீவிர தேர்தல் சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியலுக்கு பலர் ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதேபோன்று, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவியில் இருக்கும் 120-க்கு மேற்பட்ட அதிகாரிகள் எஸ்.ஐ.ஆர்.,க்கு பல்வேறு வகையான ஆதரவுகளை தெரிவித்து, ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு உறுதுணையாக உள்ளனர்.
இதற்கு, எதிராக செயல்படும் வீணர்களை வேறுபடுத்தும் விதமாக பொது மக்கள் எழுச்சியோடு நம்முடைய பிரதமர் மோடிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளிலே இந்தியா முதலிடமாக வளர்வதற்கு உறுதுணையாக இருப்போம்’ என்றார்.
