/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் 6ம் தேதி மகர கும்ப தீபம் ஏற்றம்
/
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் 6ம் தேதி மகர கும்ப தீபம் ஏற்றம்
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் 6ம் தேதி மகர கும்ப தீபம் ஏற்றம்
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் 6ம் தேதி மகர கும்ப தீபம் ஏற்றம்
ADDED : பிப் 19, 2026 06:58 AM
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி மகா யாகம் மற்றும் கும்ப தீப தரிசனத்தில் பங்கேற்க முன்பதிவு நடைபெற்று வருகிறது.
நவக்கிரகங்களில் ஒருவரான சனீஸ்வரர் வரும் மார்ச் 6ம் தேதி காலை 8:26 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இப்பெயர்ச்சியினால் ஏற்கப்படும் தோஷங்கள் நீங்க வேண்டி, புதுச்சேரி அடுத்தமொரட்டாண்டியில் அமைந்துள்ள சனீஸ்வரர் கோவிலில் மகா யாகம் மற்றும் மகர கும்ப தீப தரிசனம் நடக்கிறது.
இந்த பூஜையில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். பங்கேற்க விரும்புவோர் ரூ.3,000 கோவிலில் செலுத்தி தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரத்துடன் பதிவு செய்து கொள்ளலா ம்.
மேலும், விபரம் வேண்டுவோர் சிதம்பர கீதாராம குருக்களை 93454 51655 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.