அனைத்து பிராந்தியங்களின் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்
அனைத்து பிராந்தியங்களின் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்
UPDATED : ஆக 31, 2026 10:34 PM
ADDED : ஆக 31, 2026 08:02 PM
புதுச்சேரி: அனைத்து பிராந்தியங்களுக்கும் சமமான வளர்ச்சி உறுதி செய்யப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
மானிய கோரிக்கையின் பதிலுரையில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட் கூட்டதொடருக்கு முன்னதாக, அனைத்து எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி பிரச்னைகளை கேட்டுள்ளேன். அவர்களும் எழுத்து மூலமாக தெரிவித்துள்ளனர். அடுத்த 15 நாட்களுக்குள் நாள் ஒன்றுக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக துறை செயலர் மற்றும் தலைவரை மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பேன்.
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.950 கோடி நிதி கேட்கப்படும். மேலும், மத்திய அரசிடம் ரூ4 ஆயிரத்து 200 கோடி நிதி கோர கோப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய நீர்வளம் அமைச்சகத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீர் தேக்க தொட்டிகள், நீர் தேக்கங்கள் மற்றும் வெள்ளத்தடுப்பு சுவர் கட்ட நிதி கேட்கப்படும்.அனைத்து பிராந்தியதற்கும் பொதுவான வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
எதிர்கட்சி, ஆளுங்கட்சி பாகுபாடின்றி செயல்படுவேன். மத்திய அரசு புதுச்சேரியை சில சமயம் மாநிலமாகவும், சில சமயம் யூனியன் பிரதேசமாகவும் கருதுகிறது. பல முறை முதல்வர் கோரிக்கை வைத்தும் நிதிக்குழுவில் சேர்க்கவில்லை. நான் முன்பு மாநில அந்தஸ்துக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். நான்கு பிராந்தியங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்கு கிடைக்கும் நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன்.
