ADDED : ஜன 05, 2025 05:43 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால், பெரிய பேட், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கவியரசன், 36; புதுச்சேரி காவல் துறையில் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிகிறார். இவர் அண்மையில் புதுச்சேரி சிறை துறையில் வார்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கும் அப்பகுதியில் உள்ள அவரது உறவினர் கோபால் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் காரணமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த 2ம் தேதி கோபால் மகன் வேலாயுதம், 35, மற்றும் அவரது நண்பர் சாதிக், 33, ஆகியோர் கவியரசனை திட்டி, உருட்டுக்கடையால் தாக்கினர்.
காயமடைந்த கவியரசன் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கவியரசன் புகாரின் பேரில், காரைக்கால் போலீ சார் வழக்குப் பதிந்து, சாதிக்கை கைது செய்தனர். வேலாயுதத்தை தேடி வருகின்றனர்.
