/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழக்கறிஞரின் சொத்தை அபகரிக்க முயன்றவர் கைது
/
வழக்கறிஞரின் சொத்தை அபகரிக்க முயன்றவர் கைது
ADDED : பிப் 09, 2026 04:37 AM
புதுச்சேரி: அரியாங்குப்பத்தில் வழக்கறிஞரின் சொத்தை அபகரிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம், சுப்பையா நகரை சேர்ந்தவர் ரவி, 50; வழக்கறிஞர். இவர், விழுப்புரத்தை சேர்ந்த வைத்திலிங்கம், ஆனந்தன், சந்திரா மற்றும் ரவி ஆகியோருக்கு சொந்தமாக, அரியாங்குப்பம், சாமிநாயக்கர் வீதியில் 2,184 சதுரடியில் உள்ள பழமையான வீட்டை, கடந்த செப்., 4ம் தேதி தனது பெயருக்கு கிரையம் செய்தார்.
இவர் வாங்கிய வீடு மிகவும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், கொம்யூன் பஞ்சாயத்து அனுமதியுடன் கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி, வீட்டை இடித்து விட்டு, சுற்றுச்சுவர் மற்றும் ெஷட் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, இந்த இடத்தை தங்கள் வேறு ஒருவருக்கு விற்றதாகவும், அதனை நீ எப்படி வாங்கினாய் என கேட்டு, அரியாங்குப்பம் சாமிநாயகர் வீதியை சேர்ந்த மோகன்ராஜ், 56, அவரது சகோதரர் கோடீஸ்வரன், 57; ஆகியோர் போலி பத்திரம் தயார் செய்து, சொத்தை அபகரிக்கும் எண்ணத்தில், வழக்கறிஞர் ரவிக்கு மிரட்டல் விடுத்தனர்.
வழக்கறிஞர் ரவி அளித்த புகாரின் பேரில், மோகன்ராஜ், கோடீஸ்வரன், ராணி, கோவிந்தன், அன்புகணேசன் ஆகியோர் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய அன்பு கணேசன், 53, என்பவரை, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

