/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சூப்பர் மார்க்கெட்டில் திருட முயன்றவர் கைது
/
சூப்பர் மார்க்கெட்டில் திருட முயன்றவர் கைது
ADDED : பிப் 13, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: சூப்பர் மார்க்கெட்டில் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள சூப்பர் மார்க்கெட் பகுதியில், நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அப்போது, ரோந்து வந்த டவுன் போலீசார், ஓட முயன்ற அந்த நபரை மடக்கி விசாரித்தனர்.
அவர், காரைக்கால் கோவில்பத்து தெற்கு தெருவை சேர்ந்த அரசு, 26, என்பதும், அவர் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டின் கதவை உடைத்து திருட திட்டமிட்டு, இரும்பு கம்பி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து, அரசு மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

