தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரின் கதவை உடைத்து பணம் திருடிய நபர் கைது

 காரின் கதவை உடைத்து பணம் திருடிய நபர் கைது

 காரின் கதவை உடைத்து பணம் திருடிய நபர் கைது


ADDED : பிப் 09, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 04:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை, முத்தமிழ் வீதியை சேர்ந்த பரமகுரு மகன் மோகன மகேந்திரா, 24. இவர் கடந்த 6ம் தேதி நடந்த தனது தங்கையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, காரில் வைத்திருந்த ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான மொய் பணம் மற்றும் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றதாக உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதி சி.சி.டி.வி.,கேமரா காட்சிகளை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். அதில், காரின் பின்பக்க கதவை உடைத்து, நகை மற்றும் பணத்தை திருடி சென்றது, சின்ன காஞ்சிபுரம், ரங்க கிருஷ்ணா நகரைச் சேர்ந்த மூர்த்தி மகன் தில்லி கணேஷ், 41, என்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார்தில்லி கணேஷ்திண்டிவனத்தில் பதுங்கி இருந்தபோது கைது செய்தனர்.

அவரிடமிருந்து ஒரு லட்சம் ரொக்கம், ஒரு கிராம் தங்க நாணயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதியாக ரூ.99 ஆயிரத்தை தனது வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்திருப்பது தெரியவந்தது.அந்த பணத்தையும் உரிய முறையில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வழக்கில் விரைந்து குற்றவாளியை கைது செய்து நகை மற்றும் பணத்தை மீட்ட போலீசாரை சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., சுருதி ஆகியோர் பாராட்டினர்.

கைது செய்யப்பட்ட தில்லி கணேஷ், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us