ADDED : ஏப் 15, 2025 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி ஒதியன்சாலை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட சோனாம்பாளையம் சந்திப்பு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒதியன்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது ஒருவர் பைக்கில் கட்டப்பை மாட்டிக் கொண்டு குட்கா பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின் அவரிடம் நடத்திய விசாரணையில், கல்மண்டபம் திருமுருகன் நகரைச் சேர்ந்த கண்பிடல், 43;, என்பது தெரியவந்தது. பின் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ. 15 ஆயிரத்து 750 மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.