தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடமானம் வைத்த நிலம் விற்பனை செய்தவர் கைது: மேலும் ஒருவருக்கு வலை

 அடமானம் வைத்த நிலம் விற்பனை செய்தவர் கைது: மேலும் ஒருவருக்கு வலை

 அடமானம் வைத்த நிலம் விற்பனை செய்தவர் கைது: மேலும் ஒருவருக்கு வலை


ADDED : ஜன 12, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 03:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தேங்காய்திட்டில் அடமானம் வைத்த நிலத்தை கிரையம் செய்தது போன்று ஏமாற்றிய 2 பேரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, தேங்காய்திட்டு அருட்பெருஞ்ஜோதி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி பாலசுந்தரி, 37. தேங்காய்திட்டு, புருஷோத்தமன் நாயக்கர் வீதியில் உள்ள தனது 1800 சதுர அடி நிலத்தை ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த புரோக்கர் சிவக்குமார் மூலம் அரியாங்குப்பம், பாரதி நகரை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் சுனில்குமார், 37; என்பவரிடம் ரூ.9 லட்சத்திற்கு கடந்த 2024 ஜூன் மாதம் அடமானம் வைத்தார். அதன் பின் மாதந்தோறும் வட்டி தொகையாக 22 ஆயிரத்து 500 ரூபாய் புரோக்கர் சிவக்குமார் மூலம் சுனில் குமாரிடம் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் 6 மாதங்கள் கழித்து பணத்துடன், பாலசுந்தரி சுனில்குமார் அலுவலகத்திற்குச் சென்றபோது, அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து அடமானம் வைத்த நிலத்தின் பத்திரத்தை ஆய்வு செய்தபோது அடமானம் வைத்திருந்த நிலத்தை கிரையம் செய்து கொடுத்தது போன்று ஏமாற்றி சுனில்குமார், அதனை மற்றோரு நபருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாலசுந்தரி அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் தலைமறைவாக இருந்த சுனில்குமார், சிவக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்து தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று, சுனில்குமார்,37: புதுச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள புரோக்கர் சிவக்குமார் இதேபோல் பலரை ஏமாற்றியதும், இவர்கள் இருவர் மீது சி.பி.சி.ஐ.டி.,போலீசில் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து சுனில்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமைவாக உள்ள சிவக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us