ADDED : ஏப் 01, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: பஸ்சில் மதுபானம் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் காரைக்கால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் தமிழகத்திற்கு மதுபானம் கடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், கோவில்பத்து, தென்றல் நகரை சேர்ந்த ஐயப்பன், 50, என்பது தெரிய வந்தது.
அவர் மீது, நகர போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்து, ரூ.6,440 மதிப்புள்ள மதுபானங்களை பறிமுதல் செய்து, கலால்துறை அதிகாரிகளிடம் ஒப்படைந்தனர்.
