/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செவிலியர் வீட்டில் 25 சவரன் திருட்டு ஒருவர் கைது; தம்பதிக்கு வலை
/
செவிலியர் வீட்டில் 25 சவரன் திருட்டு ஒருவர் கைது; தம்பதிக்கு வலை
செவிலியர் வீட்டில் 25 சவரன் திருட்டு ஒருவர் கைது; தம்பதிக்கு வலை
செவிலியர் வீட்டில் 25 சவரன் திருட்டு ஒருவர் கைது; தம்பதிக்கு வலை
ADDED : ஜூலை 31, 2025 03:11 AM
புதுச்சேரி: புதுச்சேரி, பிராந்தியம் மாகே பந்தக்கல்லைச் சேர்ந்தவர் ரம்யா, 36;செவிலியர். இவர், கடந்த 25ம் தேதி இரவு பணிக்கு சென்றுவிட்டு, காலை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 சவரன் நகை திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ரம்யா அளித்த புகாரின் பேரில், பள்ளூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். வீட்டின் கதவு உடைக்கப்படாமல் திறந்துஇருந்ததால், ஏற்கனவே வீட்டிற்கு வந்து சென்ற நபர்கள் குறித்து போலீசார் ரம்யாவிடம் விசாரித்தனர்.
அப்போது, குழந்தைகளை கவனித்து கொள்ள தனியார் அமைப்பு மூலம் ைஷனி என்ற பெண் வந்ததாகவும், அவர் குழந்தைகளை கவனிக்காமல் மொபைல் போனில் பேசியப்படி இருந்ததால், அவரை அனுப்பி விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் ைஷனியை தேடியபோது, ைஷனி, அவரது கணவர் திலீப், கணவரின் தம்பி தினேஷ் ஆகியோர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.இந்நிலையில், தினேைஷ கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், செவிலியர் வீட்டில் நகைகளைதிருடியதை ஒப்புக்கொண்டார். பின், அவரது வீட்டின் தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த 15 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திலீப் மற்றும் ைஷனி தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.