/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைனான்சியரிடம் பணம் பெற்று கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
/
பைனான்சியரிடம் பணம் பெற்று கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
பைனான்சியரிடம் பணம் பெற்று கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
பைனான்சியரிடம் பணம் பெற்று கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : அக் 25, 2025 06:28 AM

புதுச்சேரி: பைனான்சியரிடம் பணம் பெற்றுக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, சாரம் சக்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி, 29; பைனான்சியர். இவர் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை மீட்க முடியாதவர்களுக்கு பணம் கொடுத்து நகையை மீட்டு, வேறொரு வங்கியில் அடகு வைக்க கமிஷன் பெற்று கொள்வார்.
அதன்படி, பாலாஜி ரெட்டியார்பாளையத்தில் உள்ள உஜ்ஜீவன் வங்கியில் நகைகளை அடகு வைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதன்மூலம் வங்கியில் பணிபுரிந்து வரும் நகை கடன் பிரிவில் பணிபுரியும் பாஸ்கர், சிவக்குமார் ஆகியோரின் பழக்கம் ஏற்பட்டது.
பாலாஜியிடம், பாஸ்கர், சிவக்குமார் ஆகியோர் அரியாங்குப்பத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பவரின் வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க ரூ.11 லட்சத்து 55 ஆயிரம் தேவைப்படுகிறது என்றார்.
உடனே பாலாஜி பணத்தை அனுப்பி வைத்தார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டு முத்துக்குமரன், பாஸ்கர், சிவக்குமார் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்தனர். இதுபற்றி கேட்டபோது அவர்கள் பாலாஜிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, முத்துக்குமரன், பாஸ்கர், சிவக்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர். முத்துக்குமரனை போலீசார் நேற்று கைது செய்தனர். வங்கி ஊழியர்களான பாஸ்கர், சிவக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

