ADDED : செப் 28, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சாணராப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையள் சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், அவர் மேட்டுப்பாளையம் சரவணன் மகன் ராஜதுரை என்கிற ரெமோராஜ்,27; என தெரிந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கத்தியை பறிமுதல் செய்தனர்.
