தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு 

காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு 

காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு 


ADDED : செப் 28, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேரு எம்.எல்.ஏ., தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கை சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது நேரு எம்.எல்.ஏ., கூறுகையில், தேர்தல் முடிந்து எம்.எல்.ஏ.வாக விநாயகம் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தொகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம் உடனடியாக செயல்பாட்டிற்கு வரும். மக்கள் கொண்டு வரும் மனுக்கள் மற்றும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும். ரேஷன் பொருட்களை தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருக்கும் மகளிர்களுக்கு மகளிர் உதவித்தொகை ரூ. 2500 பெற்றுத்தரப்படும்.

கல்வி உதவித்தொகையாக தாலுகா அலுவலக சான்றிதழ்கள் உடனுக்குடன் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் உள்ள அனைத்து பகுதியிலும் உள்ள அடிப்படை பிரச்னைகளை மொபைல் மூலம் தெரிவித்தால் உடனுக்குடன் சரி செய்யப்படும். தொகுதி முழுதும் பாதாள சாக்கடை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி கழிவுநீர் வீதிகளில் வழிந்து ஓடாதபடி தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் குடிநீர் பிரச்னை தீர்க்கும் விதமாக வாய்ப்புள்ள பகுதிகளில் மினரல் வாட்டர் யூனிட் அமைத்து தரப்படும். தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சாரம் மற்றும் தடையில்லா மின்சாரம் கிடைக்க உறுதி செய்யப்படும். சாலைகளில் உள்ள மின்கம்பங்களில்  தேவைக்கு ஏற்ப மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி முழுதும் புதைவட மின்சாரம் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us