/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி ஆசிரியர் கொலை வழக்கில் கைதானவர் சிறையில் அடைப்பு
/
மாஜி ஆசிரியர் கொலை வழக்கில் கைதானவர் சிறையில் அடைப்பு
மாஜி ஆசிரியர் கொலை வழக்கில் கைதானவர் சிறையில் அடைப்பு
மாஜி ஆசிரியர் கொலை வழக்கில் கைதானவர் சிறையில் அடைப்பு
ADDED : நவ 30, 2024 04:52 AM

பாகூர் : மாஜி உடற்கல்வி ஆசிரியர் கொலை வழக்கில் கைதான வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். கடலுார், வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த மாஜி உடற்கல்வி ஆசிரியர் தினகரன், 38, பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றங்கரையில், கடந்த 25ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தினகரனை கடலுார், திருபாதிரிப்புலியூரை சேர்ந்த அரவிந்த், 23; ஆட்டோ டிரைவர் சதீஷ், 30, ஆகியோர் அடித்து கொன்றது தெரியவந்தது.
பாகூர் போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து, அரவிந்தை கைது செய்தனர். அவரை நேற்று சிறையில் அடைத்தனர். சதீஷை தேடி வருகின்றனர்.
சதீஷ் மீது 2 கொலை முயற்சி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.