ADDED : ஆக 19, 2026 04:57 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால், திருநள்ளாறு அத்திப்படுகை கீழத்தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் செந்தில், 45; புதுத்துறை வடக்கு தெருவை சேர்ந்தவர் மனோகர், 42; இருவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று புதுத்துறை தேசிய நெடுஞ்சாலை அருகில் சிலருடன் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, செந்தில் மற்றும் மனோகரை, அவர்களுடன் மது அருந்தியவர்கள் பாட்டிலால் தாக்கினர். இதில், தலையில் பலத்த காயமடைந்த செந்தில் அதே இடத்தில் இறந்தார்.
மனோகர் பலத்த காயத்துடன் மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்திலின் உடலை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
