டிப்பர் லாரி மீது பைக் மோதி குறிஞ்சிப்பாடி வாலிபர் பலி
டிப்பர் லாரி மீது பைக் மோதி குறிஞ்சிப்பாடி வாலிபர் பலி
ADDED : ஆக 18, 2026 10:22 PM
பாகூர்: டிப்பர் லாரியின் பின் பகுதியில் பைக் மோதிய விபத்தில், குறிஞ்சிப்பாடி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மற்றொரு வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த சிவநந்திபுரம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் தமிழ்ச்செல்வன், 19; இவர் தனது உறவினரான சசிகுமார், 21; என்பவருடன், நேற்று மதியம், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தனது நண்பருக்கு பிறந்திருக்கும் குழந்தையை பார்பதற்காக பல்சர் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
பைக்கை, தமிழ்செல்வன் ஓட்டிச் சென்றார்.பரிக்கல்பட்டு – முள்ளோடையில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்ற போது, முன்னாள் சென்ற டிப்பர் லாரி திடீரென வேகத்தை குறைத்தால் பின்னால், பைக் ஓட்டி வந்த தமிழ்செல்வன் பிரேக் பிடித்து நிறுத்த முயன்றார். அதற்குள், கட்டுபாட்டை இழந்த பைக், லாரியின் பின் பகுதியில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், படுகாயமடைந்த தமிழ்செல்வன், சசிகுமார் இருவரையும், உடன் வந்த அவரது நண்பர்களும், பொது மக்களும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தமிழ்ச்செல்வனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சசிகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
