வலிப்பு நோய்க்கு 100 வது அறுவை சிகிச்சை: ஜிப்மர் மருத்துவமனை சாதனை
வலிப்பு நோய்க்கு 100 வது அறுவை சிகிச்சை: ஜிப்மர் மருத்துவமனை சாதனை
UPDATED : ஆக 18, 2026 10:38 PM
ADDED : ஆக 18, 2026 10:22 PM
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் வலிப்பு நோய்க்கான நுாறாவது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த வலிப்பு நோய் சிகிச்சை திட்டத்தின் மூலம் நுறாவது அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்து முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. மூளையின் குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் வளர்ச்சி குறைபாட்டுடன் கூடிய மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத வலிப்பால் பாதிக்கப்பட்ட 30 வயது, வாலிபருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதன் மூலம் வலிப்பு நோய்க்கு சிறந்த சிகிச்சையளிக்கும் பொதுத் துறை மருத்துவ மையங்களில் ஒன்றாக ஜிப்மர் திகழ்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஜிப்மரில் 50 வலிப்பு நோய் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நோய்க்கான விரிவான சிகிச்சை வசதிகள் குறைந்த எண்ணிகையிலான மருத்துவ மையங்களில் மட்டுமே கிடைக்கின்றன. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கடினம். இத்தகையவர்களுக்கு, அரசின் பொருந்தக்கூடிய திட்டங்கள், நிறுவனத்தின் ஆதரவு வழிமுறைகளின் கீழ், குறைந்த செலவில் ஜிப்மரில் கிடைக்கிறது.
மேலும், ஸ்டீரியோ இ.சி.ஜி., உள்ளிட்ட ஊடுருவும் வகையிலான வலிப்பு நோய் கண்காணிப்பு வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னேடுக்கப்படுகின்றன.இத்தகவலை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
