தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெண்ணை தாக்கிய கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு


ADDED : அக் 27, 2026 05:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2026 05:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, தேத்தாம்பாக்கம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் வினோத்குமார் மனைவி அனு, 28. இவர் தனது கணவர் வினோத்குமாரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே, கணவன்– மனைவி இடையேயான விவாகரத்து வழக்கு புதுச்சேரி குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது.

நேற்று (அக்.,26) இரவு அனு தனது குழந்தையின் விளையாட்டு பொருட்களை எடுப்பதற்காக கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, கணவர் வேறுவொரு பெண்ணுடன் இருந்ததாக கூறப்படுகிறது. அது குறித்து அனு கேட்டதால் கோபமடைந்த கணவர் வினோத்குமார், அவரது உறவினர் தேவேந்திரன் மற்றும் அந்த பெண் இணைந்து அனுவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.

புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார், கணவர் வினோத்குமார், தேவேந்திரன் மற்றும் அந்த பெண் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us