UPDATED : அக் 28, 2026 12:00 AM
ADDED : அக் 27, 2026 05:06 PM
புதுச்சேரி: மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் இன்று (28ம் தேதி) நடக்கிறது.
புதுச்சேரி மின்துறை உதவி செயற்பொறியாளர் நகரம் 1 பிரிவுக்குட்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்ப்பு முகாம், தம்பு நாயக்கர் வீதியல் உள்ள இளநிலை பொறியாளர் தெற்கு மத்திய அலுவலகத்தில் இன்று (28ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது.
அதில், குருசுக்குப்பம், வைத்திக்குப்பம், சின்னய்யா நகர், வ.உ.சி. நகர், டி.வி. நகர், ஒயிட் டவுன், புல்வார்டு, வாணரபேட்டை, நேத்தாஜி நகர் 1,2,3 பகுதி, அவ்வை நகர், ஜெயராம் செட்டியார் தோட்டம், அப்துல் கலாம் நகர், கோவிந்த் சாலை, கோலாஸ் நகர், ராசு உடையார் தோட்டம், பிரன்சுவா தோப்பு, வம்பாகீரப்பாளையம், துப்ராயபேட், உப்பளம் ஆகிய பகுதிகளில் உள்ள நுகர்வோர்கள் முகாமில் கலந்துகொண்டு மின்துறை சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.
