ADDED : அக் 27, 2026 05:08 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ராஜிவ் சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட ஊர்க்காவல்படை வீரரை மிரட்டியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி ஊர்படை வீரர் வினோத். இவர் நேற்று (அக்.,26) காலை 11.30 மணியளவில் ராஜிவ் சிக்னலில் பணி புரிந்து கொண்டிருந்தார். அப்போது மணி என்பவர் அக்சஸ் ஸ்கூட்டரில், கொக்குபார்க் பக்கம் இருந்து ராங் ரூட்டில் வந்துள்ளார். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த வினோத் அவரை தடுக்க முயன்றார். அப்போது வினோத் மீது வண்டியை இடிப்பது போல் வந்த மணி அவரை ஆபாசமாக திட்டி மிரட்டி உள்ளார்.
வினோத் கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்து வடக்கு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
