தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி –கடலுார் சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

புதுச்சேரி –கடலுார் சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

புதுச்சேரி –கடலுார் சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி


UPDATED : அக் 27, 2026 04:59 PM

ADDED : அக் 27, 2026 04:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 04:59 PM ADDED : அக் 27, 2026 04:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: கடலுார் சாலை மெகா பள்ளங்களுடன் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.

புதுச்சேரி – கடலுார் பிரதான சாலையில், தினந்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. சென்னை மற்றும் வேளாங்கண்ணி பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் இந்த சாலை வழியாக செல்கின்றனர்.

இந்த சாலையில் உள்ள நோணாங்குப்பம் படகு குழாமிற்கு, படகு சவாரி செய்ய வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். காரைக்கால், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலுாரில் இருந்து அவசர சிகிச்சை பெற நோயாளிகள் ஆம்புலன்சில் வருகின்றனர்.

கடந்த பல மாதங்களாக கடலுார் சாலை போடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மரப்பாலத்தில் முதல் முள்ளோடை வரை சாலை படுமோசமான நிலையில் உள்ளது. அதில், அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை சாலை இரு பகுதியில் மெகா பள்ளங்களுடன் காட்சி அளிக்கிறது.

இரவில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையே படுமோசமான நிலையில் இருப்பதாக வாகன ஓட்டிகள் தினமும் புலம்பி செல்கின்றனர். பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்குள் சாலையை அமைக்க நெடுசாலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us