UPDATED : அக் 27, 2026 04:47 PM
ADDED : அக் 27, 2026 04:44 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சாரத்தில் சென்டரிங் ஷீட் சரிந்து விழுந்து தொழிலாளி கால் எலும்பு முறிவு ஏற்பட்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பம் மணவெளி ரோட்டை சேர்ந்தவர் பிரான்சிஸ். சென்டரிங் தொழிலாளி. இவர் சாரம் திருமுடிசேதுராமன் நகரில் கடந்த 12ம் தேதி புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் சென்டரிங் பணி செய்து வந்தார்.
அப்போது, சென்டரிங் ஷீட் சரிந்து விழுந்தது. இதில் பிரான்சிஸ் இரண்டு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்து அவரது மனைவி ஜெயசெல்வி கொடுத்த புகாரின் பேரில், கட்ட காண்ட்ராக்டர் மூர்த்தி, சென்டரிங் காண்ட்ராக்டர் சடையான்டி ஆகியோர் மீது டி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
