தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நுாதன முறையில் நண்பரிடம் கார் மோசடி

நுாதன முறையில் நண்பரிடம் கார் மோசடி

நுாதன முறையில் நண்பரிடம் கார் மோசடி


UPDATED : அக் 11, 2026 01:47 AM

ADDED : அக் 11, 2026 01:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 01:47 AM ADDED : அக் 11, 2026 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யோகபாலா, 28. இவரது காரை (பி.ஒய்.01.சி.வி., 7797) அவரது நண்பர் சரவணனின் நண்பரான உதயா, 34, என்பவர் உறவினருக்கு மருத்துவ சிகிச்சைக்கு கேரளா செல்ல உள்தாகவும், அதற்காக கார் வேனும் என யோகபாலவிடம் கேட்டுள்ளார்.

அதன்படி, கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி இரவு 7 மணிக்கு யோகபாலவிடம் இருந்து உதயா கார் வாங்கி சென்றார. அதற்காக முன்பணமாக ரூ. 5 ஆயிரம் உதயா கொடுத்துள்ளார். ஆனால் ஆனால் அதன்பிறகு காரை ஒப்படைக்காமல் அவ்வப்போது வாடகை பணமாக ரூ. 20 ஆயிரம் ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார்.

சந்தேகமடைந்த யோகபாலா காரில் உள்ள ஜி.பி.எஸ்., கருவி மூலம் அவரது காரில் இருப்பிடத்தை பார்த்தார். அதில் கார் தேனி மாவட்டத்தில் இருந்தது. பின் அங்கு யோகபால சென்று விசாரித்தபோது உதயா காரினை ரூ. 6 லட்சத்துக்கு அடமானம் வைத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து யோகபாலா முதலியார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us