UPDATED : அக் 11, 2026 01:47 AM
ADDED : அக் 11, 2026 01:45 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வங்கி அதிகாரி போல் பேசி பல்கலைக்கழக பேராசிரியையிடம் ரூ.2.50 லட்சம் மோசடி செய்த ஆன்லைன் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா, 42; புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியை. இவரின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் தன்னை வங்கி அதிகாரி எனத் தெரிவித்தார்.
அவர், பவித்ராவின் வங்கி பரிவர்த்தனை வரம்பை உயர்த்த உதவுவதாக தெரிவித்தார். இதனை நம்பி அவரின் மொபைல் எண்ணுக்கு வந்த ரகசிய எண்ணை தெரிவித்தார்.
இதையடுத்து அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 லட்சத்து 67 ஆயிரத்து 384 ரூபாயை மர்ம நபர் எடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
