/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் சாவு
/
மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் சாவு
ADDED : ஜன 15, 2025 12:18 AM
அரியாங்குப்பம், : மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அரியாங்குப்பம் அடுத்த மணவெளியை சேர்ந்தவர் பழனி, 59; இவரது மகள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து, தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இதனால், மனமுடைந்த பழனி, கடந்த, 12ம் தேதி, எலி பேஸ்டை மதுவில் கலந்து குடித்து மயங்கினார்.
உடன் அவரை, அவரது குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.
அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.