sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீட்டு படியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

வீட்டு படியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

வீட்டு படியில் இருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : நவ 27, 2024 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 05:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ரெட்டியார்பாளையம், பாவாணர் நகர் ஜலகண்ட முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலைக்குமார், 34. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.

ரெட்டியார்பாளையம் லேம்பட் சரவணன் நகரைச் சேர்ந்த ரஞ்சிதா, 33, என்பவருடன் பழகி அவருடன் வாழ்ந்து வந்தார்.

இருவரும் சேர்ந்து ரெட்டியார்பாளையம் கல்லரை வீதியில் சாலையோர இரவு டிபன் கடை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு இருவரும் கடை முடிந்து வீட்டிற்கு வந்தனர். அப்போது மதுபோதையில் இருந்த கலைக்குமார் நான்காவது மாடியில் ஏறும் போது படியில் இருந்து தவறி விழுந்தார்.

காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us