UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 07:25 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் குறித்து ஏனாம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏனாம் அக்ரஹாரம் பகுதியில் வசித்தவர் பெம்மடி கணேஷ்,43. இவர் நேற்று முன்தினம் 6:00 மணிக்கு தனது வீட்டின் முதல் மாடியில் நின்றிருந்தார். அப்போது அவர் திடீரென தவறி, கீழே புதிதாக கட்டப்பட்டு வரும் செப்டிக் டேங்கில் விழுந்தார்.
தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஏனாம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து அவரது மனைவி பெம்மடி நாகதேவி,36; அளித்த புகாரின் பேரில் ஏனாம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
