UPDATED : அக் 30, 2026 07:29 PM
ADDED : அக் 30, 2026 07:25 PM

புதுச்சேரி: வாடகை செலுத்ததாத கடையை கோர்ட்டு உத்தரவுப்படி காலி செய்து அமினா உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
சென்னை, வேளச்சேரியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்,86. இவருக்கு சொந்தமான கட்டடம், புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ளது. இந்த இடத்தில் பிருந்தாவனத்தை சேர்ந்த ராஜன்,70, என்பவர் கடந்த 2010 முதல் இன்ட்டீரியர் டெக்ரஷன் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வந்தார். சில மாதங்கள் வாடகை கொடுத்த அவர், பின் தரவில்லை.
இதுகுறித்து பாலசுப்ரமணியன் புதுச்சேரி முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 2022ம் ஆண்டு வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இடத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. ஆனால், ராஜன் இடத்தை ஒப்படைக்கவில்லை.
இதை தொடர்ந்து பாலசுப்ரமணியன் தரப்பில் கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி திவ்யா, அமினா மூலம் இடத்தை காலி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, அமினா அம்பி போலீஸ் பாதுகாப்புடன் கடையில் இருந்த பொருட்களை ஜப்தி செய்தனர். தொடர்ந்து காலியான கடையை உரிமையாளிடம் ஒப்படைத்தனர்.
