தட்டாஞ்சாவடி அரசு பள்ளியில் வட்ட அளவிலான போட்டிகள்
தட்டாஞ்சாவடி அரசு பள்ளியில் வட்ட அளவிலான போட்டிகள்
UPDATED : அக் 30, 2026 08:59 PM
ADDED : அக் 30, 2026 08:54 PM

புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை சார்பில், வட்டம் அளவிலான குழந்தைகள் தின விழா போட்டிகள் தட்டாஞ்சாவடி அரசு துவக்கப்பள்ளியில் நடந்தது.
வட்டம் ஒன்றின் பள்ளி துணை ஆய்வாளர் அனிதா தலைமை தாங்கினார். தொடர்ந்து நடந்த போட்டிகளில் வட்டம் ஒன்றில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையிலான 400 மாணவர்கள் பங்கு பெற்றனர்.
அவர்களுக்கு பேச்சு, கட்டுரை, பாட்டு, நடனம், நாடகம், மாறு வேடம், வினாடி வினா உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிற்கும் மூன்று பரிசுகள் வீதம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டியின் ஒருங்கிணைப்பாளராக தலைமை ஆசிரியர் இளங்கோவன் செயல்பட்டார். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் ராமதாஸ், சரஸ்வதி, ஜெயந்தி பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகராஜன், துவக்க பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
