/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தவறி விழுந்து காயமடைந்தவர் சாவு
/
தவறி விழுந்து காயமடைந்தவர் சாவு
ADDED : ஜன 14, 2026 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: படிக்கட்டில் தவறி விழுந்து காயமடைந்த கிராம சேவகர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கவுண்டன்பாளையம், புதுதெருவை சேர்ந்தவர் வேல்முருகன்,59; வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம சேவகராக பணியாற்றி வந்தார்.இவர், கடந்த 11ம் தேதி வீட்டின் முதல் மாடியில் இருந்து படிக்கட்டில் இறங்கியேபோது நிலை தடுமாறி விழுந்தார்.
படுகாயமடைந்த அவர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

