தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சூதாட்டத்தில் தகராறு ஒருவருக்கு கத்தி வெட்டு

சூதாட்டத்தில் தகராறு ஒருவருக்கு கத்தி வெட்டு

சூதாட்டத்தில் தகராறு ஒருவருக்கு கத்தி வெட்டு


ADDED : ஆக 11, 2026 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2026 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சூாதடிய போது ஏற்பட்ட தகராறியில் இறைச்சி கடை ஊழியரை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

முத்தியால்பேட்டை, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் குமார், 45; பெரிய மார்க்கெட்டில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அவரது உறவினர் ராதா என்பவருடன் காசு வைத்து சூதாடினார்.

இதில் குமார் பணத்தை இழந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைநத ராதா, அங்கிருந்த கத்தியை எடுத்து குமாரின் கழுத்து மற்றும் தோள்பட்டையில் வெட்டி விட்டு தப்பிச் சென்றார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த குமாரை அவரது உறவினரகள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us