ADDED : மே 03, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சக்திவேல் மகன் சதன், 25; மீன் பிடி தொழிலாளி.
டி.என்.பாளைத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 19. இவர் நல்லவாடு சாலையில் பைக்கில் வேகமாக சென்றார். ஏன், வேகமாக செல்கிறாய் என, சதன் தட்டி கேட்டார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு நல்லவாடு கடற்கரை சென்ற சதனை மணிகண்டன், கத்தியால் வெட்டினார். காயமடைந்த சதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டனை தேடி வருகின்றனர்.

