ADDED : நவ 12, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: பொது இடத்தில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் திருநள்ளாறு தாமனங்குடி பகுதியில் சப்.இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாலிபர் கத்தியை காட்டி,பொது இடத்தில் தகாத வார்த்தையால் பேசி பொதுமக்களை மிரட்டியுள்ளார்.
பின்னர் போலீசார் விசாரணையில் திருநள்ளாறு தாமனங்குடி மேல நல்லழுந்தூர் மாதா கோவில் வீதியை சேர்ந்த முருகன்,40 ;எனத்தெரியவந்து, திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

