ADDED : ஜூலை 24, 2026 06:26 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி அரசு துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது.
தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். வட்டம் ஒன்று பள்ளி துணை ஆய்வாளர் அனிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நாகராஜன் வாழ்த்தி பேசினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நாட்குறிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர் தின விழாவில், வட்டம் ஒன்று சார்பில் நடனமாடிய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
