தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு தேசிய அளவிலான விருதுகள் பெற்று சாதனை

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு தேசிய அளவிலான விருதுகள் பெற்று சாதனை

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு தேசிய அளவிலான விருதுகள் பெற்று சாதனை


ADDED : செப் 28, 2026 09:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 09:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எடுஸ்கில்ஸ் அறக்கட்டளை சார்பில் 6வது எடுஸ்கில்ஸ் இணைப்பு 2026 மற்றும் 3வது எடுஸ்கில்ஸ் மனிதவள உச்சி மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் மேரியட் விடுதியில்  இரண்டு நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டில் ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு 5 விருது பெற்ற சாதனை படைத்துள்ளது.  

இதில் கல்வி, தொழில், அரசு மற்றும் மனிதவளத் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இம்மாநாட்டில், ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரிக்கு சிறந்த செயல்திறன் மிக்க பொறியியல் கல்லுாரி விருது “ஐந்தாண்டு கூட்டாண்மை விருது” என  இரண்டு தேசிய அளவிலான விருதுகளும், மாணவர்களின் திறன் மேம்பாடு, தொழில்துறை சார்ந்த கற்றல் மற்றும் கல்வி-தொழில்துறை இணைப்பை வலுப்படுத்தியதற்காக சிறந்த செயல்திறன் மிக்க பொறியியல் கல்லுாரி விருதும், எடுஸ்கில்ஸ் அமைப்புடன் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இணைந்து செயல்பட்டதற்காக கூட்டாண்மை விருதும், ஐந்தாண்டு கல்லுாரியின் இயக்குநர் வெங்கடாஜலபதிக்கு   “இயக்குநர் சிறப்புத் திறன் விருது - 2026 மற்றும் தொலைநோக்குப் பார்வையுடைய கல்வித் தலைவர் விருது” ஆகிய இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், கல்லுாரி செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைத் தலைவர்  மதுசூதனன், எடுஸ்கில்ஸ் அமைப்பின் திட்டங்களைச் சிறப்பாக ஒருங்கிணைத்து “சிறந்த செயல்படுத்தியதற்காக ஒருங்கிணைப்பாளர் விருது” பெற்றார். இதன் மூலம் கல்லுாரிக்கு 5 தேசிய அளவிலான விருதுகள் பெற்றன. 

விருதுகள் பெற்றவர்களை  மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் பாராட்டினர். மேலும் தேசிய அளவில் கல்லுாரிக்குப் பெருமை சேர்த்த கல்லுாரி இயக்குனர் வெங்கடாஜலபதியை பாராட்டினர். தொடர்ந்து கல்லுாரியைச் சேர்ந்த தேர்வுக் கட்டுப்பாட்டாளர்,  புல முதன்மையர்கள் உள்ளிட்ட துறை வாரியான புல முதன்மையர்கள் பாரட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us