மணக்குள விநாயகர் சட்ட கல்லுாரி புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
மணக்குள விநாயகர் சட்ட கல்லுாரி புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : அக் 17, 2026 05:17 PM

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் சட்டக் கல்லுாரியில், 2026ம் கல்வி ஆண்டிற்கான, புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்வி அறக்கட்டளை செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், துணைச் செயலாளர் வேவலாயுதம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கண்ணன் பேசுகையில், ‘சட்டம் பயில்வதன் முக்கியத்துவம், சமூகத்தில் சட்டத்தின் பங்களிப்பு மற்றும் அதன் தனித்துவமான சிறப்பம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களையும் அதன் நோக்கங்களையும் சட்டக்கல்லுாரி மாணவர்கள் ஆழமாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். கல்லுாரிப் பருவத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி சட்ட நுணுக்கங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், வழக்குகளை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முன்பாகவே சமரச முயற்சிகளை மேற்கொள்வது குறித்து மாணவர்கள் உரிய பயிற்சி பெற வேண்டும்’ என்றார்.
கல்லுாரியின் டீன் வின்சென்ட் அற்புதம் நன்றி கூறினார். விழாவில், பேராசிரியர்கள், முதலாமாண்டு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
