ADDED : அக் 17, 2026 05:17 PM
அ நிறம் | அளவு
பாகூர்: அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஆனந்தன், 44. இவரது தாய் ஆதி, 73. மூதாட்டியான இவர், கடந்த 13ம் தேதி, வீராம்பட்டினம் சச்சின் நகரில் 100 நாள் வேலை முடித்து, சாலையில் தனது காலை நீட்டியபடி அமர்ந்திருந்தார். அவ்வழியாக சென்ற ஆம்புலன்ஸ் ஆதியின் காலில் மோதியது. படுகாயமடைந்த அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் டிரைவர் மயிலாடுதுறையை சேர்ந்த பிரகாஷ், 32, என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
